2015-05-29 இன்று வெள்ளிக்கிழமை பகல் உற்சவம் காரைநகர் மக்களினால் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் உள்வீதி சுற்றி முடிந்ததும் வேட்டை திருவிழாவின் சிறப்பம்சமான வேட்டையாடுதல் நிகழ்வினை சமய சடங்குகளுடன் நிகழ்துவதற்காக வெளிவீதி சுற்றிவந்து ஆலயத்தின் வட கிழக்கு மூலையில் வேட்டைத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வேட்டைதிரு விழாவின் முக்கிய நிகழ்வான காய்கறி வெட்டும் நிகழ்வும் சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றது. அதன் பின் ஆலயம் திரும்பியவுடன் மூல மூர்த்திகளுக்கு பிரச்சித்த அபிஷேகம் நடைபெற்று நிகழ்சிகள் நிறைவு பெற்றது. எட்டு நாதஸ்வர தவில் வித்துவான்கள் சற்றும் சளைக்காமல் தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்கள் இசை வழங்கியதை பாராட்டாமல் இருக்கமுடியாது. இவ்வாறாக ஆலயத்தின் தர்மா கர்த்தா என்றும் இறை பணியில் நிற்கும் கணகுக சிவத் தொண்டர் இரா. விஜயநாதன் அவர்கள் ஆகம, சமய முறைப்படி சிறப்பாக விழாக்கள் நடத்தவேண்டும் என்பதில் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரனமாக இருந்துவருவது பாராட்டுதல்களுக்குரியதாகும். விழாவின் இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு சிறப்பான நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் வெள்ளை அலங்காரத்தில் காட்சியளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அனைவரையும் அழைக்கின்றோம்.