சப்பறத் திருவிழா இனிதே நடந்தேறியது. கொட்டும் மழையையும் கருதிற்கொள்ளாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மூன்று மூர்த்திகள் சப்பறத்தில் அமர்ந்து வீதி உலா வந்தமை பார்பவர்களுக்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது. விழாவினை சிறப்பிக்கும் வண்ணம் பாராளமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து ஆலய தர்மகர்த்தா திரு இரா விஜயநாதன், ஆலய மகோற்சவ குருக்கள் நவாலியூர் பிரதிஷ்ட பூசனம் சிவஞான வித்தகர் பிரமஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் அவர்கள் மற்றும் நாதஸ்வர தவில் வித்துவான்கள் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக பிரம்டன் ஸ்ப்ரிங்டேல் பாரளமன்ற உறுப்பினர் ஹரிந்தர் மாலி அவர்கள் ஆலய தர்ம கர்த்தா இரா விஜயனாதனை பாராட்டி தனது சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். பெண்கள் பெருவாரியாக கொட்டும் மழையிலும் அரோகரா சொல்லி வடம் இழுத்து வந்தமை உணர்ச்சி பூர்வமாக இருந்தது. சிறு பிள்ளைகள் கூட சிரித்த முகத்துடன் வடம் பிடித்து இழுத்து வந்தமை பாராட்டுதல்களுக்குரியதாகும். பன்னிரண்டு நாதஸ்வர தவில் வித்துவான்கள் அசத்தலாக இசை வழங்கி பக்தர்களை இறைபக்தி கலந்த சந்தோசக்கடலில் மூழ்க வைத்தனர். அன்னதானம் இறுதியாக வழங்கி நிகழ்சிகள் முடிவடைந்தது.