இரவுத் திருவிழா இனிதே நடந்தேறியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பிரபல நடன ஆசிரியை மீரா கனகராஷா அவர்களின் மாணவிகள் ஓர் அசத்தலான நடனத்தினை வழங்கி அனைவரையும் இறையருள் கடந்த இன்ப கடலில் மூழ்கடிக்க வழிசமைத்தனர். தவில் நாதஸ்வர வித்துவான்கள் வழமைபோல இனிமையான தெய்வீக பாடல்களை வாசித்து பக்தர்களை இறைபக்தி கலந்த உணர்வினை ஏற்படுத்தியிருந்தனர். மீரா அவர்களின் ஏழு மாணவிகள் மிகவும் சிறப்பான முறையில் நடனத்தினை ஆடி அசத்தினார்கள். மீரா அவர்கள் உட்பட அனைத்து மனைவிகளுக்கும் ஆலய தர்ம கர்த்தா இரா. விஜயநாதன் அவர்கள் பிரம்டன் மாநகர முதல்வர் அவர்களின் கௌரவ சான்றிதல்களை வழங்கியதுடன் ஆலய மகோற்சவ குருக்கள் நவாலியூர் பிரதிஷ்ட பூசனம் சிவஞான வித்தகர் பிரமஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் அவர்கள் ஆசிர்வதித்து வாழ்த்தினார்கள். எல்லாம்வல்ல விநாயகப்பெருமான் வெள்ளை கலந்த பூமாலைகளுடன் சோடிக்கப்பட்டு காட்சியளித்தார். நாளைய தினம் 2015-05-30 சப்பற திருவிழா. அனைவரையும் அழைக்கின்றோம். இறுதியில் அனதானம் வழங்கப்பட்டது.